எங்களை பற்றி...
2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதியன்று திரு. தனேஷ் குமார் அவர்களால் தொடங்கப்பட்டது தான் இரத்வி டிரேடர்.
முதலில் சில்லறை வணிகமாக செய்து கொண்டு இருந்த நம் நிறுவனம் இன்று கிளை நிறுவனம் நடத்தும் அளவிற்கு வளர்ந்துள்ளது என்றால் அதற்கு முழு காரணம் உங்களின் ஆதரவுதான்.
விவசாயிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே பொருட்களை பரிமாறிக்கொள்ள நமது நிறுவனம் ஒரு பாலமாக உள்ளது.
இது போன்றே தமிழகம் முழுவதும் பல கிளைகளை உருவாக்கி வாடிக்கையாளரும் உற்பத்தியாளரும் பயனடைடைய வேண்டும் என்பதே எங்கள் இலக்கு ஆகும்.. விரைவில் வெளிநாட்டுகளில் பயன்படுத்தப்படும் விவசாய நுணுக்கங்களை அறிந்து கொண்டு அதுபோல நம் நாட்டிலும் விவசாயம் செய்ய விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
இதன் மூலம் நமது விவசாயிகளும் நல்ல பயனடைடைய வேண்டும் என்பதே எங்களது நோக்கம்!!
அதுபோல வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் விவசாய உபகரணங்கள் நம் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும்.
இதன் மூலம் விவசாயிகளின் நேரம் மற்றும் உற்பத்தி விலை மிச்சமாகும்.
விரைவில் நமது நிறுவனம் இதற்கு உண்டான நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து இதற்கான பணியை மேற்கொள்ளும்..
2025 ஆம் ஆண்டு தை மாதத்திற்குள் இதற்கான பணி தொடங்கப்படும்..
எமது இலட்சியம் ஒன்றே விரைவில் பண்டமாற்று முறை!!!